கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டுகள்.
அறிஞர் அண்ணா பிறந்ததினமான செப்டம்பர்-15ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, ஒரு கோடியே, 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ 1000 செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான வருட முதலீடு கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய்.
உரிமைத் திட்டம் என்ற பெயரும், அனைத்துப் பெண்களுக்கும் ரூ.1000 கொடுக்காமல் தேவையான பயனாளர்களைத் தேர்வு செய்ததும் மிகவும் பாராட்டுக்குரியது.
நம் முதல்வருக்கும், அவரின் குழுவிற்கும் வாழ்த்துகள்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்