ஒவ்வொரு முறை சென்னையில் மழை பெய்யும் போது நாம் ஏன் இவ்வளவு சிரமப்படவேண்டும்? மழை வீட்டில் புகுந்து, மழை நீருடன், சாக்கடை நீர் கலந்து சுகாதாரச் சுமை ஏற்பட்டு, வாகனங்கள் பழுதடைந்து இதற்கெல்லாம் யார் செலவு செய்லது?
நீங்கள் வசிக்கும் தெருக்களில் கடந்த ஒரு வருடத்தில் சாலைகள் போடப்பட்டிருந்தால் அந்தச் சாலைகள் தரமானதாக இருக்கிறதா?
ரூ 2000 கோடியோ, ரூ. 4000 கோடியோ இவ்வளவு செலவு செய்தும் ஏன் இந்த நிலை? நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் இல்லாதது தான். இது பற்றி Youtube தளத்தில் (CHATWITHKC) நேற்று வெளியிட்ட காணொளியையும் பாருங்கள்.
இந்த முறை தவறு செய்து விட்டோம். ஆனால் அடுத்த முறை புயல் வரும் போது ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வீட்டில் புகாத வண்ணம், வடிகால் அமைப்புகளைச் சரி செய்து, சாலைகளின் தரத்தை உயர்த்துவது அரசு மற்றும் நம் அனைவரின் கடமை.
அதற்குரிய முயற்சிகளை எடுத்து நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்துதல் வேண்டும்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்