ஒரு நல்ல தன் விவரக் குறிப்பு (Resume) எப்படி இருக்க வேண்டும் என்று சென்ற வாரம் எழுதினோம். இந்த வாரம் யாருடன் வேலை செய்ய வேண்டும்?
ஒரு நிறுவனம் உங்களை எடுக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வது போல் நாமும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரலாமா, வேண்டாமா என்று முடிவு செய்தல் அவசியம்.
நீங்கள் வேலைக்குச் சேரும்போது-
1.கற்றலுக்கான வாய்ப்புகளைக் கணக்கிடுங்கள். ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்யச் சொல்கிறார்களா அல்லது பலதரப்பட்ட விஷயங்களைக் கற்க வாய்ப்புகள் இருக்கிறதா என்று கேளுங்கள்.
2. உங்கள் மேலாளர் (Manager) இதற்கு முன்னால் என்ன செய்தார், அவரிடம் கற்க வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று நோக்குங்கள்.
3. நிறுவனத்தின் வேலைக் கலாச்சாரம் (work Culture) உங்களுக்கு உகந்ததாக இருக்கிறதா என்று பாருங்கள்.
4. உங்களை விட பன்மடங்கு திறமையானவர்கள் நிறுவனத்தில் இருக்கிறார்களா என்று தேடுங்கள்.
5. எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறோம் என்பதைவிட யாருடன் வேலை செய்கிறோம் என்பது முக்கியம். இது உங்கள் பிற்கால வளர்ச்சிக்குப் பயன் தரும் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் இருக்க, முதலில் உங்கள் திறமைகளை நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வாசித்தல் எழுதுதல், கற்றல் கற்றலைத் திறம்பட பயன்படுத்துதல் உங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்