பெண்கள் வேலைக்குச் செல்லும் போது அவர்களுக்கு ஒரு சிறந்த சூழல் உருவாகிறது. பிறரை நம்பி வாழாமல், அவர்களுக்குத் தேவையானதை அவர்களே முடிவு செய்து வாங்கும் பொருளாதார நிலைமை ஏற்படுகிறது.
ஒருவரிடம் பணம் இருந்தாலும், எதுவும் செய்யாமல் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு வீட்டில் இருந்தால் அது பிள்ளைகளுக்கும் நல்லதல்ல. வேலைக்குச் செல்லும்போது பலதரப்பட்ட மக்களைப் பார்க்க இயலும். அவர்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்புகள் அமையும்.
வீட்டைப் பார்த்துக் கொள்வது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது வெறும் பெண்கள் மட்டும் செய்யும் வேலை இல்லை. இதில் ஆண்களுக்கும் சமபங்கு உள்ளது.
ஆண்கள், பெண்கள் இருவரும் வேலை செய்யும் வீடுகளில் பிள்ளைகள் இன்னும் சிறப்பாக வளர்வர் என்று ஆய்வுகள் சொல்கின்றன. தகவல் தொழில் நுட்பத் துறையில் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்று ஆகிவிட்ட சூழ்நிலையில் பெண்கள் நீங்கள் வேலை செய்யாமல் வீட்டில் இருந்தால் உடனே நல்ல நிறுவனங்களில் விண்ணப்பித்து வேலைக்குச் சேருங்கள்.
ஆண்கள், உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிக்க ஊக்கம் தாருங்கள்.
இது நமக்கும், நம் குடும்பத்திற்கும், நாம் வாழும் சமூகத்திற்கும் பெரும் பயன்களைப் பெற்றுத் தரும்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்