நமக்குப் பிரியமானவர்கள் சில செயல்களைச் செய்யும் போது அவர்கள் மேல் உள்ள அக்கறையில் இப்படி செய்ய வேண்டாம் என்று கூற நேரிடும். அக்கறை சில சமயம் கோபமாக மாறி, நம் குரலின் ஓசை வேறுபடும்.
நாம் அக்கறை எடுத்துக்கொண்டு சிலரை மாற்ற நினைக்கும் போது நம் யோசனைகளை ஏற்றுக் கொண்டு மாறலாம். நீ யார் சொல்வது? என்று கேட்கலாம். நாம் சொல்வதற்கு நேர் எதிராகவும் மேண்டுமென்றே செய்யலாம். இது போன்ற சூழல்களில், நாம் கோபம் கொள்ளாமல் அமைதி காப்பது நல்லது. ஒருவரின் குணத்திற்கு இதுதான் காரணம் என்று இருக்காது பல நேரத்தில் அவர்கள் செய்யும் செயல் அறியாமையால் கூட இருக்கலாம். நம் யோசனைகளை ஒருவர் கேட்கவில்லை எண்றால் நாம் கோபம் கொண்டு நம்மையும், பிறரையும் வருத்தாமல் இருப்பது நல்லது.
நாம் அமைதியாக இருந்தாலே பிரச்சனைகள் பல காலப்போக்கில் சரியாகி விடும். பிறரும் நாம் அன்று சொன்னது சரிதான் என்று உணர்வர். அவர்கள் உணராமல் போனாலும் நாம் வருத்தப்படத் தேவையில்லை.
ஐந்து விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை.
அமைதி காத்திடுங்கள்
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்