நமக்கு வசதி வாய்ப்புகள் வந்தவுடன், சில சமயம் நம்மில் சிலர், எங்கிருந்து வந்தோம் என்பதை மறந்து விடுகிறோம்.
ஒரு வேளை நாம் வசதியுடன் பிறந்திருந்தாலும், நம் பெற்றோர், அல்லது நம் அப்பத்தா, ஐயா அவர்களின் வாழ்க்கையை ஒரு சாதரண நிலையில் இருந்து தான் தொடங்கி இருப்பர்.
பிறரும் நம்மைப் போல் மனிதர்கள் தான் என்பதை உணர வேண்டும். மனித வாழ்க்கையே ஒரு கூட்டு முயற்சி தான். நாம், அல்லது நம் பெற்றோர் வளர, பலரும், பல சமயங்களில் எதையும் எதிர்பாராமல் உதவி இருப்பர்.
குரலை உயர்த்தி, அதிகாரம் செய்து ஒருவரின் இயலாமையைப் பயன்படுத்தி வேலை வாங்குவது ஒருவகை நகைப்புக்குரியது.
எளியோரிடம், குரலை உயர்த்தி, அதிகாரம் செய்யும்போது, ஒரு வினாடி நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். காலச் சக்கரம் மாறும்.
நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை மறவாமல், நன்றியும் மறவாமல் இருந்தால் பன்மடங்கு முன்னேறலாம்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்