வாடிக்கையாளர் சேவை
Customer service

வாடிக்கையாளர் சேவை

வீட்டில் இருக்கும் காரை சர்வீஸ் செய்ய சென்னையில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் கொடுத்தேன். காரில், அது, இது சரியில்லை என்று ஏகப்பட்ட செலவு. மேலும், காப்பீடு (Insurance) சர்வேயர் என்பதால் நேரம் தாழ்த்தல்.

சில வாரங்கள் ஓடின. வாகனம் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. இரண்டு பேர் கூப்பிட்டு ‘வாடிக்கையாளர் சேவை’ எப்படி என்று கேட்டார்கள். அலைபேசியை எடுக்க-வில்லை என்றால் சிறிது நேரம் கூட காத்திருக்காமல் நாம் எடுக்கும் வரை திரும்பி அழைப்பர்.

செலவு எல்லாம் செய்து விட்ட பின்னர் அந்த நிறுவணத்தில் இருந்து ஒருவர் கூப்பிட்டு காரை விற்கிறீர்களா கேட்டார். இல்லை, திரும்ப எனக்கு போன் செய்யாதீர்கள் என்றேன். இரு வேறு நாட்களில், இருவர் மறுபடியும் அழைத்து காரை விற்கிறீர்களா என்று கேட்டனர். காரை விற்க வேண்டுமானால் செலவு செய்யும் முன் கேட்டிருக்க வேண்டும். கோபம் வரவில்லை. சிரிப்பு தான் வந்தது. 

கிட்டத்தட்ட, மூன்று, நான்கு வாரம் கழித்து அந்த நிறுவனத்தின் நிறுவனருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். நல்ல வேளை அவர் நிலைமையைப் புரிந்து கொண்டு, பதில் அனுப்பினார். வாகனத்தை சரி செய்து வீட்டிற்கு அனுப்பினார்கள்.

வாடிக்கையாளர் சேவையில், நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. 

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top