ஒரு நாளில், நாம் அது, இது செய்ய வேண்டும் என்று பலவற்றை எடுத்துக்கொண்டு, சிலசமயம் நேரமின்மையால் தடுமாறுவோம். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று செயல்கள் மிக நேர்த்தியாக செய்தால் போதும்.
நண்பரின் திருமண அல்லது பிறந்தநாள் விழாவிற்குச் செல்லும்போது, போகும் வழியில் ஒரு வேலையை, முடித்து விட்டுச் செல்லலாம் என்பது நல்ல எண்ணம் தான். ஆனால் அதற்கு உரிய பயண நேரத்தைக் கணக்கிட்டு முன்னரே கிளம்ப வேண்டும். அவ்வாறு இல்லாமல் 6 மணி விழாவிற்கு, 5:45 க்கு கிளம்பி, வழியில் பல வேலைகளை வைத்துக் கொள்வது ஒரு வகை அவசரத்தை ஏற்படுத்தும். னால் வேண்டிய ஒரு. இதனால் செல்ல வேண்டிய விழாவிற்கும் குறித்த நேரத்தில் செல்லாமல் செய்ய வேண்டிய வேலையையும் சரியாகச் செய்ய மாட்டோம்.
இந்தத் தவறை, நான் பலமுறை செய்திருக்கிறேன். நம் வாழ்வில், எது தேவை, எது தேவையில்லை என்பதை உணர்ந்து, தேவையில்லாதவற்றைக் கழித்து விடுவது பெரும் பயன்களைத் தரும். கழிக்கும் போது, நமக்கு இன்னும் கூடுதல் நேரம் கிடைக்கும். அந்த நேரத்தில் புது யோசனைகள் தோன்றும் அதில் எதைச் செயல்படுத்துதல் வேண்டும் என்பதிலும் கழித்தல் தேவை.
கழித்தல் பன்மடங்கு வளர்ச்சி ஈட்டும்.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்