ஆசிரியர் தின வாழ்த்துகள் (Happy Teachers Day)
Happy Teachers Day

ஆசிரியர் தின வாழ்த்துகள் (Happy Teachers Day)

செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம்.

ஒருமுறை என் நண்பன் கார்த்திக் சுவாமிநாதன்  உடன் பேசிக் கொண்டிருந்த போது, நம் இந்தியாவில் ஆசிரியர்கள் ஆசிரியர்களாக மட்டுமில்லாமல் நம் பிள்ளைகளுக்கு இன்னொரு பெற்றோர்களாகவும் இருக்கிறார்கள் என்று கூறினார்.

சற்று சிந்தித்துப் பார்த்ததில் அவர் கூறியது மிகச் சரிதான் என்று தோன்றியது

இந்திய பள்ளி பள்ளிகளின் பெரும் பலம் நம் பிள்ளைகள், நாம் சொல்வதைக் கேட்கவில்லை என்றால், ஆசிரியர் சொன்னால் கேட்பார்கள்.

நானும், என் தம்பியும் பள்ளியில் படிக்கும் போது நாங்கள் செய்ய வேண்டியதை சில முறை எங்கள் தந்தை எங்களிடம் கூறுவார்.

நாங்கள் கேட்கவில்லை என்றால், எங்களுக்குத் தெரியாமல் ஆசிரியர்களிடம் கூறி எங்களை மாற்றுவார்.

இது எல்லோர் வீட்டிலும் நடக்கும் . ஆசிரியர்களும், பெற்றோர் கூறுகிறார்கள் என்பதற்காக, அதற்குரிய நேரத்தை ஒதுக்கி மாணவர்களை நல்வழிப்படுத்துவர்!

பெற்றோரைப் போல், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒரு உற்ற துணையாக இருந்து வாழ்க்கையில் வெற்றி பெற நல்வழி வகுக்கிறார்கள். எனக்குப் பாடம் கற்பித்த, என் பிள்ளைகளுக்கு கற்பிக்கும் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Share
Download Download
Top