டாடா நிறுவனத்தின் தலைவர் ந.சந்திரசேகரன் அவர்களின் நேர்காணல் ஒன்றினை கடந்த வாரம் பார்த்தேன்.
அதில் அவர்” பல விஷயம் செய்லோம், ஏதாவது ஒன்றில் வெற்றி கிடைக்கும் என்ற எண்ணமும், செயலும் நல்ல செயல்முறை அல்ல” என்று கூறினார்.
அவர் கூறியது மிகச் சரி என்று தோன்றியது. தனி ஒருவராய் நமக்கு நேரம் குறைவு. நாம் ஆசைப்பட்ட அனைத்தையும் செய்ய இயலாது. எது வேண்டும், வேண்டாம் என்பதில் தெளிவு தேவை.
ஒரு நிறுவனமாக, அல்லது குழுவாக வேலை செய்யும்போது போது நாம் பல சோதனை முயற்சிகள் செய்வோம்.
இவ்வாறு செய்யும்போது முழு மனதோடு இது வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட வேண்டும்.
சரியான குழுவும், திறமையான மனிதர்களும் இல்லாமல், ஏனோ தானோ என்ற முயற்சிகள் வெற்றி பெறாது.
நான் பார்த்த காணொளியின் முகவரி கருத்துப்பகுதியில் உள்ளது.
செய்யும் வேலையை முழுமனதோடு நல் இலக்கோடு செய்வோம்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்