எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார் ஒளவையார். பிள்ளைகள் எழுதுவது அவர்களைத் தெளிவாகச் சிந்திக்கச் செய்யும்.
நம் அப்துல் கலாம் அவர் படித்த எம்.ஐ.டி. கல்லூரி தமிழ் சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்கேற்றுச் சுயமாக விமானம் உருவாக்குதல்’ பற்றி கட்டுரை எழுதினார். இது அவர் அறிவியல் பயணத்தைச் செதுக்க அடிப்படையாக அமைந்தது.
வாசிப்பதையும், எழுதுவதையும் நம் கல்வி முறையின் அடிப்படையாக்கி மாணவர்களை ஊக்குவிப்பது எதிர்காலத்தில் பெரும் பயன்களை ஈட்டித் தரும்.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்.