669 தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களில் உள்ளது. வசதி படைத்தோர், அரசு அதிகாரிகள் பிள்ளைகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளையும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்களையும் தான் விரும்புகிறார்கள்.
1966ல் தமிழ்நாட்டில் முதல் சி.பி.எஸ்.இ பள்ளி தொடங்கப்பட்டது. 2010ல் 250 பள்ளிகளாக இருந்த சி.பி.எஸ்.இ பள்ளிகளின் எண்ணிக்கை 2017ல் 800 பள்ளிகளாகவும், 2023ல் 1469 பள்ளிகளாகவும் உயர்ந்து உள்ளது.
பல தனியார் மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாறிவிட்டன. இன்னும் பல பள்ளிகள் மாற முயற்சித்துக் கொண்டு இருக்கின்றன.
பள்ளி கல்விக்காக 2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ 32,599.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2022-23ல் ரூ 40,299 கோடி.
நீட் நேர்வில் 720/720 மதிப்பெண்கள் எடுத்த பிரபஞ்சனுக்கு வாழ்த்துகள். பிரபஞ்சனின் பெற்றோர் இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள். ஆனால் பிரபஞ்சன் படித்தது தனியார் பள்ளி.
போதிய இடவசதி, நிதி ஒதிக்கீடு இருந்தும் ஏன் பெற்றோர் அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்வதில்லை? ஏன் மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாற முயற்சித்துக் கொண்டு இருக்கின்றன?
இது போன்று கேள்விகள் கேட்டு, நாம் எங்கே தவறு செய்கிறோம், தவறைத் திருத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் போன்றவற்றை ஆராய்ந்து தமிழ்நாடு அரசு பள்ளிகள் மற்றும் பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவது காலத்தின் தேவை.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்