எண்பது வயதைக் கடந்தவர்கள் தினசரி நடைபயிற்சியைப் பெரும்பாலும் தாங்கள் வசிக்கும் தெருவிலேயே மேற்கொள்வதைக் காணலாம். அவர்களிடம் பேசும் போது, அவர்கள் சொன்னது ஒருவேளை நடைபயிற்சியின் போது தவறி விழுந்துவிட்டால் நான் யாரென்று தெருவில் உள்ளோருக்குத் தெரியும். பத்திரமாக தன்னை வீட்டில் சேர்த்து விடுவார்கள் என்றனர்.
ஒருவரிடம் எவ்வளவு தான் பணம் இருந்தாலும், பற்பல நாடுகள் சென்று வந்தாலும், வயதில் பெரியவர்கள் தேடுவது பேச்சுத் துணையைத் தான். புத்தகங்களும் அவர்களுக்கு சிறந்த துணையாக இருக்கின்றன.
வயதில் இளையோர், உங்கள் தெருவில் அல்லது அடுக்கக குடியிருப்பில் அல்லது உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் தினசரி பேசுங்கள். நிறைய தெரிந்து கொள்ளலாம். அவர்களுக்கும் பேச்சுத் துணையாக இருக்கும்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்