அரசு பேருந்துகளில் தமிழ்

அரசு பேருந்துகளில் தமிழ்

தமிழ்நாடு அரசின் சென்னை அரசு பேருந்து விளம்பரங்களில் தமிழைத் தமிழில் எழுதாமல் ஆங்கில எழுத்துகளைக் கொண்டு எழுதி இருக்கும் விளம்பரங்களை நாம் பார்க்கமுடியும்.

நம் அழகுத்தமிழை, நம் அழகுத்தமிழ் எழுத்துகள் அல்லாமல் ஆங்கிலத்தில் எழுதும் விளம்பரங்களை அரசு பேருந்துகளில் அனுமதித்தல் கூடாது.

தமிழை ஆட்சி மொழியாக கொண்ட தமிழகத்தில் தமிழ்நாடு முழுக்க பயணிக்கும் அரசு பேருந்துகளை, தமிழை வளர்க்க ஒரு வாகனமாக பயன்படுத்தலாம்.

தமிழ் விளம்பரங்களை, தமிழில் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதும் விளம்பரங்களை அரசு பேருந்துகளில் வளர்ப்பதன் மூலம் தமிழ் சார்ந்த பொருளாதாரம் வளரும். 

தமிழும் வளரும்.

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top