ஆசிரியர்கள்

ஆசிரியர்கள்

தமிழகத்தில் மாணவர்களுக்குக் ‘காலை உணவுத் திட்டம்’ கொண்டு வந்த நம் முதல்வர்க்கு வாழ்த்துகள்.

 இம்மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் அவர்கள் செய்யும் வேலையிலும் பிரதிபலிக்கும்.

தமிழகத்தில்,

  • கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னர் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்குப் பணி ஆணைத் தேர்வும் நடத்தப்படவில்லை, பணி ஆணையும் வழங்கப்படவில்லை.
  • 2010 ல் ஒரே மாதத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தோர்க்கு ரூபாய் 20,000 வரை ஊதிய முரண்பாடு. 
  • தொடக்கக் கல்வி பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.12,500 தான் சம்பளம்.

இது போன்ற சூழலுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவை நியாயமானதாகக் கூட இருக்கும்.

பள்ளிக் கல்வித் துறையிலும், மற்றத் துறைகளிலும் வெளிப்படைத் தன்மையோடு அனைத்தையும் பகிரும் போது, இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

உதாரணமாக 

  1. தமிழகத்தில் எத்தனை அரசு பள்ளிகள் மாவட்டம் தோறும் உள்ளன. 
  2. ஒவ்வொரு அரசு பள்ளியிலும் எத்தனை மாணவர்கள் பயிலுகின்றனர். 
  3. எத்தனை ஆசிரியர்கள் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் உள்ளனர். ஆசிரியர்- மாணவர் விகிதம் என்ன? 
  4. ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தேவை என்ன?

தரவு பகுப்பாய்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தரவை மாதம்தோறும் புதுப்பித்து அனைவருக்கும் எளிதில் புரியும் படி பள்ளிக் கல்லித் துறை இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.

இந்த வெளிப்படைத் தன்மை ஒரு சிறந்த நிர்வாகத்தை உருவாக்கும். தற்போது நடக்கும் ஆசிரியர் போராட்டங்கள் நடக்காமல் இருக்கவும், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மக்கள், அரசு ஒருங்கிணைந்துச் செயல்படவும் வழி செய்யும். 

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top