மதுரை அருகில் இருக்கும் கீழடி அருங்காட்சியகத்துக்குச் சென்ற மாதம் சென்று இருந்தேன். நான் சென்றபோது அருகில் இருக்கும் பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர். கீழடி ஒரு சுற்றுலாத் தளமாக மாறி வருகிறது. கட்டிடத்தின் வடிவமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. தமிழக அரசுக்கு வாழ்த்துகள்.
2 ஏக்கர் பரப்பில் 31 ஆயிரம் சதுர அடியில் சுமார் 18 கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு நம் முதல்வரால் மார்ச் மாதம் 5ஆம் தேதி திறக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் பொது இடங்கள் கட்டும் போது கட்டிடத் தரம், கழிவறை வடிவமைப்பு (Toilet Design) போன்றவற்றை உறுதி செய்வது அவசியம். உதாரணமாக கீழடியில் இருக்கும் ஆண்கள் கழிவறையை ஒரு சமயத்தில் ஒருவர் தான் பயன்படுத்த இயலும். அருங்காட்சியக கழிவறை அருகில் இருக்கும் தரைப் பதிப்புகள் (Tiles), கட்டிடம் திறந்து ஆறு மாத காலத்தில் உடைந்து காட்சியளிக்கின்றன.
இது போல் இல்லாமல் அரசு கட்டும் ஒவ்வொரு கட்டிடத்தின் தரமும் உறுதியானதாக இருக்க உரிய நடவடிக்கை எடுத்துச் செயல்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்