ஜூன் 12 ம் தேதி கிலோ ரூ 20 க்கு விற்ற தக்காளி இன்று கிட்டத்தட்ட 8 மடங்கு அதிகரித்து ரூ160 வரை விற்கப்படுகிறது.
நகரம் | ஒரு கிலோ தக்காளி விலை |
சென்னை | ரூ 117 |
மும்பை | ரூ 108 |
கொல்கத்தா | ரூ 152 |
இந்த விலையேற்றத்திற்கு வெயில், மழை என்று பல காரணங்கள் இருந்தாலும் விநியோகச் சங்கிலி (Supply chain issue) ஒரு முக்கிய காரணம்
ஒரு திரைப்படம் திரையரங்கு அல்லது ஓடிடி யில் வெளிவர விநியோகம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் தக்காளி நம்மிடம் வந்துசேர விநியோகம் அவசியப்படுகிறது.
தக்காளி விலையேற்றத்தைப் போல் கடந்த காலங்களில் வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளின் விலையேற்றத்தையும் நாம் பார்த்து உள்ளோம்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தரவு பகுப்பாய்வு (Data Analytics) மூலம் இது போன்று நிலைகளை கண்டறிந்து வரும்முன் தடுக்கலாம். விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தி மேலும் வெளிப்படைத் தன்மையை உருவாக்கலாம்.
இதுபோன்று காய்கறிகள் விலையேற்றத்தில் இருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பதை ஆராய்ந்து, எழுதி, பகிர்ந்து மறுபடியும் இதுபோன்று ஒருநிலை வராமல் தடுக்கலாம்.
பயிரிடுபவர் முதல், விநியோகிப்பவர், விற்பவர், உட்கொள்பவர் வரை அனைவரும் பயன்படும் வகையில் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்