பல தரப்பட்ட மக்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். பல மொழிகள் பேசுகிறார்கள். வட இந்திய நண்பர்கள் பல தொழிற்சாலைகளிலும் ஏன் பலரது வீடுகளிலும் சூட வேலை செய்கிறார்கள்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றார் கணியன் பூங்குன்றனார். அவர் கூறியது போல் நாம் என்றுமே பிறரை வரவேற்றுள்ளோம்.
தமிழகத்தில் வேலை செய்யும் வடஇந்திய நண்பர்கள் பலர் தமிழை மிக அழகாக பேசுகிறார்கள். அவர்களுக்கு நாம் தமிழை எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுத்தால் என்ன?
இது ஒரு தொலைநோக்கு பார்வையுடன் தமிழ்நாட்டையும் தமிழையும் வளர்க்கும். இதை ஒரு சோதனை முயற்சியாக செய்து பார்த்தால் என்ன?
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்