2023ல் ஒரு சோதனை முயற்சியாக (Experiment) எழுத ஆரம்பித்த ஞாயிறு கடிதத்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எழுதிப் பகிர்ந்தது மகிழ்ச்சி.
தமிழில் கைப்பட எழுதப்பட்ட இக்கடிதங்களைப் பார்த்து, வாசித்து, கருத்துகளைப் பகிர்ந்து ஊக்கம் தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
2024 ஆரோக்கியம் நிறைந்த, மகிழ்ச்சியான, வளமிக்க ஆண்டாக அமைய வாழ்த்துகள்.
முயற்சியும், உழைப்பும் வாய்ப்புகளைத் தரும். அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்வோம்.
‘இனிய புத்தாண்டு வாழ்த்துகள்’
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்