பயணங்கள் நம் சிந்தனைத் திறனை மேம்படுத்தும். கற்றலுக்கு பெரும் உதவியாக இருக்கும். கிரேக்கர் மெகஸ்தனிஸ் (கி.மு.302-298) சீனர் யுவான் சுவாங் (கி.பி 630) என்று பலர், பல நூறு, ஆயிரம் வருடங்களாக தொழில், கலாச்சாரப் பயணமாக நம் நாட்டிற்கு வந்துள்ளனர்.
நம் தமிழக முதல்வரின் சமீபத்திய சிங்கப்பூர், ஜப்பான் பயணங்கள் அந்நாட்டின் கலாச்சாரம், தொழில்முறை, செயல்படுத்தும் திறன் போன்றவற்றை அறிந்து கொண்டு, நம் நாட்டில் நமக்கு ஏற்றவாறு திட்டங்கள் வகுக்க பயனுள்ளதாக இருக்கும்.
நாம் பயணங்கள் செல்லவில்லை என்றால் தான் வருத்தப்பட வேண்டும்.
பயணங்கள் மேற்கொண்டு சென்னை திரும்பிய முதல்வருக்கு வாழ்த்துகள்.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்