லியோ திரைப்படம் அக்டோபர் 19 ம் தேதி காலை 9 மணிக்கு தமிழகத்தில் வெளியானது. திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தை நாடி காலை 4 மணி காட்சிக்கு அனுமதி வேண்டினர் தமிழக அரசு அக்டோபர் 19 முதல், 24 வரை தினசரி 5 காட்சிகளுக்கு, காலை 9 மணி முதல் திரையிட அனுமதி அளித்து காலை 4 மணி காட்சிக்கு அனுமதி மறுத்தது. இதே திரைப்படத்திற்கு ஆந்திரா காலை 5 மணிக்கும் கர்நாடகா காலை 4 மணிக்கும் புதுச்சேரி காலை 7 மணிக்கும் திரையிட அனுமதி அளித்துள்ளன.
அரசுக்கு இருக்கும் எத்தனையோ வேலைகளில் ஒரு திரைப்படம், 4-காட்சிகளா? 5-காட்சிகளா? என்பதில் எல்லாம் கவனம் செலுத்தாமல் இருந்தால் என்ன? ஒரு திரைப்படத்தின் வர்த்தகம், மக்கள் வரவேற்பு, போன்றவற்றை வைத்து அத்திரைப்படக் குழுவினர், திரையரங்க உரிமையாளர்கள் பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர்களே முடிவு எடுத்துக்கொண்டால் என்ன?
இதுபோல் செய்யும் போது அரசு மற்றும் நீதிமன்றங்களின் வேலை குறையும். ஒவ்வொரு அனுமதிக்கும் நாம் அரசை நாடும் தேவை இருக்காது. அரசு உதவ நினைத்தால் திரைப்படங்கள் திரை அரங்குகளில் வெளியிடும் முறையை எளிமைப் படுத்தலாம்.
குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி என்பதை நடைமுறைப்படுத்தி எளிதாக்கினால் நிர்வாகம் மேலும் சிறக்கும்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்