எளிதாக இருக்கிறது என்பதற்காக நாம் நம் பிள்ளைகளுக்கு அமேசானில் துணிமணிகளையும், காலணிகளையும் பல சமயம் வாங்குகிறோம். வாங்கிய பின், இது சரியில்லை, அது சரியில்லை என்று திருப்பி அனுப்பி விடுகிறோம்.
ரூ 150 க்கு ஒரு பொருளை நம் வீட்டுக்கு வந்து ஒருவர் தருகிறார். சரியில்லை என்றவுடன் இன்னொருவர் வீட்டிற்கு வந்து எடுத்துச் செல்கிறார். இதனால் நமக்கு ஆகும் நேரச் செலவை கணக்கிடுகிறோமா?
நம் பிள்ளைகளுக்குத் தேவையானதை அமேசானில் வாங்குவதற்குப் பதில், நம் பிள்ளைகளை அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று, நான்கு கடை ஏறி, இறங்கி அவர்களுக்குப் பிடித்ததை குறைந்த விலையில், தள்ளுபடி கேட்டு வாங்கிக் கொடுக்கும் போது, நாம் நேரத்தை நம் பிள்ளைகளோடு நல்ல முறையில் செலவிடுகிறோம் .
நம் பிள்ளைகளும் கடைகளில் பலதரப்பட்ட மனிதர்களைப் பார்ப்பர். தொழில் எப்படி நடைபெறுகிறது என்பதை கவனித்து ஒரு சிறந்த கற்றலாக நம் பிள்ளைகளுக்கு அமையும்.
சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும். மிகச் சிறந்த நினைவுகளையும் இது உருவாக்கும்
நன்றி
கார்த்திக் சிதம்பரம்