அறிஞர் அண்ணாவிற்கு ஒரு கடிதம்
அறிஞர் அண்ணாவிற்கு ஒரு கடிதம்

அறிஞர் அண்ணாவிற்கு ஒரு கடிதம்

அன்புள்ள அண்ணா, 

வணக்கம். நீயும், பெரியாரும் 1950ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 18 ம் தேதி, திருச்சியில், ஒரே காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டு சிறை சென்றீர்களாமே! அபராதத்திற்கு பதில் நீ சிறைவாசத்தை ஏற்றுக் கொண்டாயாமே?

என்ன உறுதி

நீயும் ‘தந்தை பெரியாரும்’ திருச்சியில் ஒரே சிறை வளாகத்தில் இருந்தும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள வில்லையாமே?

பெரியார் உனக்கு 6 பிஸ்கட்டுகள் இன்னொரு கைதிமூலம் கொடுத்து அனுப்பினாராமே?

திடீரென உங்கள் இருவரையும் சிறையிலிருந்து விடுவிக்க, உன் விடுதலைப் பற்றி வெளியில் உள்ளோருக்கு தெரிந்தும் உன்னை வரவேற்க யாரும் சிறைக்கு வரவில்லையாமே! பெரியாருக்காக வந்திருந்த வாகனத்தில் நீயும் ஏறிச் செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்றாயாமே!

அண்ணா அண்ணா, அண்ணா ‘உன் தியாகம் பெரிது ! உறுதி அதனினும் பெரிது! 

நன்றி!!. 

இப்படிக்கு

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top