ஒரு நாள் பயணமாக ஜூன் 18-ம் தேதி முதல் முறை இலங்கை சென்றிருந்தேன். சென்னையில் இருந்து ஒரு மணி நேரம் தான் பயணம். சென்னை சாலைகளில் உள்ள தமிழை விடக் கொழும்பு சாலைகளில் தமிழ் அதிகமாகவே இருந்தது.
இந்தியாவிற்கும், இலங்கைக்கும் ஆன தொடர்பு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. பழ பிரச்சனைகள் இருக்கும் இடத்தில், வாய்ப்புகள் தேடுவது சாமர்த்தியம்.
பிக் மி (Pick Me) நிறுவனர் ஜிப்ரி சுல்பர் உடன் கொழும்பு சாலையில் நடந்து பேசிக்கொண்டு இருக்கும் போது இந்தியா- இலங்கை இடையே ஆன கடல் பாலம் பற்றி பேச்சு சென்றது.
நம் இந்தியாவின் வெளி உறவுக் கொள்கைகளில் தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்து உள்ளோம். இந்தியாவை இணைக்கும் தகவல் தொழில்நுட்பம், ஜியோ, யு.பி.ஐ சாத்தியம் என்றால் இது போன்ற கடல் பாலமும் சாத்தியம் தான் இதைச் செயல்படுத்தக் கூடிய தலைமையும், திறமையும் இந்தியாவில் உள்ளது. இதைச் செயல் படுத்தினால் பெயர்ச்சொல்லும் பெரும் சாதனையாக இருக்கும்.
இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் கடல் பாலம், இரு நாடுகளை மட்டும் அல்ல இரு நாட்டின் உள்ளங்களையும் இணைக்கும்.
‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’
நன்றி
கார்த்திக் சிதம்பரம்