நம்மைச் சுற்றி பல தொழில் நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்படுவதை நாம் செய்திகளில் பார்க்கிறோம். நம் இந்தியாவில் நம் மக்கள் தொகையின் அடிப்படையில் நமக்கு நிறைய வேலை வாய்ப்புகள், நல்ல சம்பளத்துடன் தேவைப்படுகின்றன.
எண்ணங்கள் எவ்வளவு தான் சிறந்ததாக இருந்தாலும் அனைவரையும் நாம் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணி அமர்த்த முடியாது. பலருக்கு அதில் விருப்புமும் இருக்காது. நம் இந்தியாவில் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை இன்னும் பன்மடங்கு அதிகரிப்பது காலத்தின் தேவை. உதாரணமாக, கே.பி.ஆர் மில்ஸ், ராம்ராஜ் காட்டன் போன்ற ஜவுளித் தாயரிப்பு முதல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிக வேலை ஆட்கள் தேவைப்படும். அந்நிறுவனங்களைச் சுற்றி விநியோகச் சங்கிலி மூலமும் புது வேலைகள் உருவாகும்.
தொழில் நுட்ப நிறுவனங்களும், வெறும் தொழில்நுட்பம் மட்டும் செய்து காலம் தள்ள முடியாது. ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் உற்பத்தியும் செய்கின்றன.
நம் நாட்டில் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களைப் பெருக்கி, புது வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்.
இந்தியாவில் வசிப்போரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இது அடிப்படையாக அமையும்.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்