நான் வேலை செய்த ஒரு நிறுவனத்தில் என் ‘மேலாளரைக் கண்டால் எனக்கு எப்போதும் பயம்- நான், என்ன தான் நன்றாக வேலை செய்தாலும்
அவர் என்னை மதிப்பதில்லை போன்ற எண்ணங்கள் என் மனதில் ஓடும். பல நேரங்களில் அவரைப் பார்க்காமல் தவிர்த்திடுவேன். ஒரு வேலையும் செய்யாமல் என்னை இவ்வளவு அதிகாரம் செய்கிறாரே என்று எனக்குத் தோன்றும்.
ஒரு முறை என் பிறந்தநாளின்போது எப்போதும் போல அலுவலகத்திற்குச் சென்றேன். பொதுவாக என் பிறந்தநாளை யாருக்கும் சொல்வதில்லை. ஆனால் அன்று எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
நான் வேலை செய்யும் இடம் (Cubicle) மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அனைவரும் வந்து வாழ்த்து கூறினார்கள். நமக்கு எல்லாம் யார் இவ்வளவு செய்கிறார்கள் என்று தோன்றியது.
யார் இதையெல்லாம் செய்தார்கள் என்று என் இருந்த நண்பரிடம் கேட்டேன்.
எனக்குப் பிடிக்காது, நம்மைக் கண்டு கொள்ள மாட்டார் என்று நான் எண்ணிய மேலாளர் தான் முந்தைய நாள் இரவு இதற்கான வேலை அனைத்தையும் செய்தார் என்று நண்பர் கூறினார்.
என்னால் நம்ப முடியவில்லை. அன்றிலிருந்து நான் என் மேலாளரைப் பார்க்கும் விதமே மாறியது இன்னும் அதிக வேகத்துடன் வேலை செய்தேன்.
பல சமயங்களில், நமக்கு ஒருவரை பிடிப்பதற்கும், பிடிக்காமல் இருப்பதற்கும், நம் எண்ணங்கள் தான் காரணம்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்