ஒரு பத்திரத்தை அருகில் இருக்கும் கடையில் நகல் எடுத்து வருமாறு அலுவலகத்தில் மேலாளர் சிவனிடம் கூறினார்.
சிவன் அலுவலகத்தின் அருகில் இருக்கும் கடைக்குச் சென்று நகல் எடுக்கக் கடைக்காரரிடம் கேட்டான். கடைக்காரர் நகல் இயந்திரம் வேலை செய்யவில்லை என்று சொன்னார்.
சிவன் சரி என்று கூறிவிட்டு அலுவலகத்திற்கு திரும்பினான்.
மேலாளரிடம் அவர் கொடுத்த ரூ 20யை திரும்பக் கொடுத்து நகல் இயந்திரம் கடையில் வேலை செய்யவில்லை என்றான்.
மேலாளர் கோபப்படாமல், சிவனிடம் நீ சென்ற கடைக்கு இரு கடைகள் தள்ளி இன்னொரு கடை இருக்கிறதே!,
அந்தக் கடையில் கேட்டாயா? என்றார்.
சிவன் இந்த முறை இன்னொரு கடைக்குச் சென்று கேட்டபோது, அங்கு நகல் இயந்திரம் வேலை செய்தது. பத்திரத்தின் நகலுடன் திரும்பினான்.
ஒரு பொருள் இல்லை என்றால் மேலோட்டமாகத் தேடி விட்டு இல்லை என்று சொல்வது மிக எளிது. நான்கு கடை ஏறி இறங்கி, கேட்ட பொருளை வாங்கி, கொடுத்த வேலையை முடிப்பது சாமர்த்தியம்.
ஒரு இடத்தில் இல்லை என்றால் இன்னொரு இடம். அங்கும் இல்லை என்றால் இன்னொரு இடம். தேடல் நாம் செய்யும் வேலையை மேம்படுத்தும்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்