நாம் ஒவ்வொருவரும் எழுத வேண்டும். நாம் எழுதி யார் படிப்பார்கள் என்று தோன்றலாம். யாரும் படிக்கவில்லை என்றாலும், நாம் எழுதியது என்றேனும் ஒருநாள் நமக்கே பயன்படும்.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கைப்பட எழுதி ‘ஞாயிறு கடிதம்’ வெளிவருகிறது. 2023ல் வெளிவந்த கடிதங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் என்ன என்று தோன்றியது.. அதற்குரிய முயற்சிகளைக் கடந்த சில மாதங்களாக எடுத்தோம்.
சென்ற வாரம் சென்னை மைலாப்பூரில் உள்ள சாலையோர 89 வருட பாரம்பரியம் மிக்க “ஆழ்வார் புத்தகக் கடை’யில் ‘ஞாயிறு கடிதம்’ புத்தகத்தை வெளியிட்டோம். அவர்களின் 89 வருட கடையில் வெளியீடு செய்யப்படும் முதல் நூல் ‘ஞாயிறு கடிதம்’ என்று ஆழ்வாரின் மகள்கள் கூறிய போது அது ஒரு மகிழ்ச்சியானத் தருனமாக இருந்தது. புத்தக வெளியீடு நிகழ்ச்சியை நீங்கள் காண விரும்பினால் CHATWITHKC (Youtube) தளத்தில் காணலாம்.
ஞாயிறு கடிதம் புத்தகத்தை நீங்கள் வாங்க விரும்பினால் அமேசான் இணையதளத்திலும் கிடைக்கும்
ஒவ்வொரு வாரமும் ஞாயிறு கடிதத்தை வாசித்தும் பாராட்டியும், விமர்சனம் செய்தும் ஊக்கம் தரும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.
உங்கள் ஊக்கமே ஞாயிறு கடிதம் புத்தகம் (2023)
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்