வாட்ஸ் அப் குழுக்கள் பல உள்ளன. அதில் பலரைப் போல் நானும் உறுப்பினராக உள்ளேன். ஆனால் பெரும்பாலும் இந்தக் குழுக்களில் நடக்கும் விவாதங்களில் பங்கு கொள்வதில்லை. தேவைப்படும் நேரங்களில் குழுவில் செய்தி அனுப்பாமல், தனிச் செய்தி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இதனால் பல நன்மைகளை உணர்கிறேன்.
இப்படியெல்லாம் செய்தும், சில சமயங்களில் எதுவும் செய்ய இல்லாத நேரத்தில் வாட்ஸ் அப் நோன்கி கைகள் செல்லத்தான் செய்கிறது. இதுபோல் நடக்கும் நேரங்களில் அதை உணர்ந்து தவிர்த்திட முயற்சி செய்வேன் அதிகம் வாட்ஸ் அப் பார்க்கும் சமயங்களில் கண்களும் வலிக்கின்றன.இதையெல்லாம் தவிர்த்திட வாட்ஸ் அப்குழுக்களில் அதிகம் பங்கு கொண்டு பகிர்வதில்லை.
நீங்க எப்படி?
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்